ஊரடங்கால் சுத்தமாகி வரும் கங்கை நதி

ரித்வார்

இந்தியாவின் புனித நதியான கங்கை நீர் ஊரடங்கால் தற்போது சுத்தமாகி வருகிறது.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த ஊரடங்கால் அனைத்து தொழிற்சாலைகளும் இயங்கவில்லை.    இதனால் காற்று மாசு குறைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவித்தன.   அத்துடன் தலைநகர் டில்லியில் ஓடும் புனித நதியான யமுனை நதி தொழிற்சாலை கழிவுகள் கலக்காததால் மிகவும் சுத்தமாக உள்ளதாக தகவல்கள் வந்தன.

இந்தியாவின் புனித நதி என போற்றப்படும் கங்கை நீர் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது.   அதைச் சுத்தம் செய்யப் பிரதமர் மோடி நமாமி கங்கே என்னும் திட்டத்தை அமைத்துள்ளார்.  ஆயினும் கங்கை நீர் முழுமையாகச் சுத்தம் ஆகாமல் இருந்தது.  கங்கை நதியில் பலரும் புனித சடங்குகள் செய்வது வழக்கமாக இருந்தது.

புனித சடங்குகளின் தொடக்கத்தில் ஆசமனம் செய்வது என ஒரு வழக்கம் உள்ளது.  அதாவது கையில் இரு சொட்டு நீரை விட்டு அதைப் பருகுவதே ஆசமனம் என்பதாகும்.  கங்கை புனித நீர் என்றாலும் அதைப் பருக பலரும் பயந்து வந்த காலம் நிலவி வந்தது.  எனவே ஆசமனம் என்பதை பெயரளவில் செய்து வந்தனர்

தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கங்கைக் கரையில் உள்ள எந்த ஒரு தொழிற்சாலையும் இயங்குவதில்லை.  பல நகரங்களில் ப்க்த்ர்கள் வருகை அடியோடு நின்றது.  இதனால் நீர் மாசுபடுவது குறைந்துள்ளது. குறிப்பாக புனிதத் தலங்களான அரித்வார், ரிஷிகேஷ் போன்ற தலங்களில் கங்கை முழு சுத்தம் அடைந்துள்ளது.  தற்போது கங்கை நீர் குடிநீர் ஆக பயன்படுத்தும் நிலையை அடைந்துள்ளது.

You may have missed