டன் கணக்கில் தினமும் குப்பைக்குப்  போகும் காய்கறி..

சென்னை கோயம்பேட்டில் உள்ள காய்கறி சந்தை சிறு வியாபாரிகளுக்கும், சாமானிய மக்களுக்கும் ஆட்சியாளர்கள் அளித்த நன்கொடை.

இன்றைக்குக் கூடை ,கூடையாகக் குப்பைக்குப் போகிறது, அங்குள்ள காய்கறிகள்.

எல்லா புண்ணியமும் கொரோனா தொற்றையும், அதன் தோளில் தொற்றிக்கொண்டு வந்த ஊரடங்கையுமே சேரும்.

’’கோயம்பேடு சந்தைக்கு இரு சக்கர வாகனங்களில்  காய்கறி வாங்க வருவோர் , உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்’’ என நான்கு தினங்களுக்கு முன்னர், சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த கட்டுப்பாடுகளால் கோயம்பேட்டில் தினமும் டன் கணக்கில் காய்கறிகள் தேங்க ஆரம்பித்தன.

  நொந்து நூலாகிப் போன வியாபாரிகள், மீந்து போகும் காய்கறிகளைக் குப்பையில் கொட்டும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் தினமும் 8 டன் காய்கறிகள்  வேஸ்ட்.

கடையைச் சாத்தும் மாலைப்பொழுதில், அவற்றைக் குப்பையில் வீசி விட்டு, கொஞ்சம் கண்ணீரையும் சிந்தி விட்டுப் போகிறார்கள், வியாபாரிகள்.

‘’ கோயம்பேடு மார்க்கெட், அதன்  வரலாற்றில் முதன் முறையாக இப்போது தான் வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போது  கூட்டத்தைப் பார்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை’’ எனப் பெருமூச்சு விடுகிறார்கள், வியாபாரிகள்.

– ஏழுமலை வெங்கடேசன்