சென்னை

ற்போது கன்யாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளதால் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையின் விவரம் பின் வருமாறு :

தென் தமிழகத்தில் கன்யாகுமரி அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது.  இதனால் தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்புள்ளது.   இதன்படி  திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி, தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை ஓரிரு இடங்களில் பெய்யலாம்.

தவிர தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  விருதுநகர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம்.  அத்துடன் லட்சத்தீவு, கன்யாகுமரிக்கு இடையே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளது.  இதனால் தென் மாவட்டங்களில் கனமழை மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.