நிலக்கரி பற்றாக்குறை : தமிழகத்தில் மின் தடை வருமா?

சென்னை

மின் வாரியத்தின் இருப்பில் உள்ள நிலக்கரி இன்னும் 4 நாட்களில் தீர்ந்து விடும் என்பதால் தமிழகத்தில் மின் தடை உண்டாகலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டாகவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானமக் கழகத்துக்கு குறித்த நேரத்தில் நிலக்கரி வருவதில்லை.   இது குறித்து ரெயில்வே அமைச்சகத்திடமும் நிலக்கரி அமைச்சகத்திடமும் பல தடவை முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை என சொல்லப்படுகிறது.    இதுவ்ரை  எந்த ஒரு நடவடிக்கையும் இவ்விரு அமைச்சகமும் எடுக்கவில்லை.  அதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானமக் கழகத்திடம் தற்போது இருப்பில் உள்ள நிலக்கரி நான்கு நாட்கள் மட்டுமே உபயோகப்படுத்தும் அளவுக்கு உள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனால் உடனடியாக நிலக்கரி வராவிட்டால் மின் உற்பத்தி தடைபெறும் நிலை உள்ளது.  அத்துடன் அண்டை மாநிலங்களிலும் இதே பிரச்சினை உள்ளதாக தெரிய வந்துள்ளது.   அதனால் மின் தடை உண்டாக வாய்ப்புள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.    தற்போது காற்றாலை மின்சாரமும் குறைந்துள்ளதால் மின்வெட்டு ஏற்பட மேலும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது