கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம் : மின் தட்டுப்பாடு வருமா?

கூடங்குளம்

கூடங்குளம் 2ஆம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் அணு மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது.

இங்குள்ள 2 ஆம் அணு உலையில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையொட்டி 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தி நிறுத்தத்தால் மின் தட்டுப்பாடு நேரிடலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.