இன்று சென்னை புற நகர் ரெயில் சேவைகளில் மாற்றம்

சென்னை

ன்று புறநகர் பகுதிகளில் ரெயில்வே பராமரிப்பு பணிகள் நிகழ்வதால் ரெயில் சேவையில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் இன்று கோடம்பாக்கம் – பல்லாவரம் இடையிலும் கடற்கரை – வண்ணாரப்பேட்டை இடையிலும் ரெயில்வே  பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.   இதனால் இந்த தடங்களில் ரெயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு காலை 9.12, 9.25, 9.42, 10.00, 10.20, 10.40, 10.45, 10.50, முற்பகல் 11.10, 11.20, 11.40, 11.50, பகல் 12.10, 12.20, 12.40, 12.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு காலை 9.50, 10.00, 10.20, 10.40, 10.50, முற்பகல் 11.10, 11.20, 11.50, நண்பகல் 12, பகல் 12.50, 1.15, 1.30, 2.00, பிற்பகல் 2.15 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்தாகின்றன.

சென்னை கடற்கரை-தாம்பரத்துக்கு காலை 10.30, முற்பகல் 11.30, நண்பகல் 1.00 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும்.  சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு காலை 9.35, காலை 10.15, முற்பகல் 11.00, பகல் 12, 12.30, 1.15, மதியம் 1.45 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும்.  தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு காலை 10.10, முற்பகல் 11.00, 11.30, பகல் 12.10 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும். செங்கல்பட்டு-சென்னை கடற்கரைக்கு காலை 9.40, 10.50, முற்பகல் 11.50, பகல் 12.15, 1.00 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் விரைவு ரயில் பாதையில் இயக்கப்படும்.

இது போல ஞாயிற்றுக்கிழமை முழுமையாக ரத்தாகும் புறநகர் ரயில்கள்: சென்னை கடற்கரை-திருவள்ளூருக்கு பகல் 1.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை-பட்டாபிராம் ராணுவ பகுதிக்கு பகல் 1.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூர் மார்க்கெட்-திருவள்ளூருக்கு காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர்-மூர்மார்க்கெட்டுக்கு பிற்பகல் 2.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர்-சென்னை கடற்கரைக்கு காலை 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

திருவள்ளூர்-சென்னை கடற்கரைக்கு பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவள்ளூரில் இருந்து ஆவடி வரை மட்டும் இயக்கப்படும்.

இது தவிர் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படவேண்டிய சில மின்சார ரயில்கள், மூர் மார்க்கெட்டில் இருந்து புறப்பட்டுச் செல்வதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.