ரசிகர்கள் கண்டனம்: மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் நிவாரண நிதி அளித்தனர்

லையாள நடிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட நடிகர்கள் வெள்ள நிவாரண நிதி அளித்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில தினங்களாக  வரலாறு காணாத  அளவில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் கேரள மக்களுக்கு உதவுவதற்காக தமிழ் நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சமும் கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளனர்.  தென்னிந்திய நடிகர் சங்கம் முதற்கட்டமாக, ரூ.5 லட்சம் அளித்திருக்கிறது.  கேரள மாநில, நடிகர் விஜய் ரசிகர் மன்றமும் உதவி செய்துள்ளது

இந்நிலையில் கேரள நடிகர்கள் சங்கமான அம்மா அமைப்பு, ரூ10 லட்சத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. பெரும்பாலான கேரள, நடிகர், நடிகை கள் நிவாரண நிதி அளிக்கவில்லை.

ஆகவே அவர்களுக்கு கேரள ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து மலையாள நடிகர் மம்மூட்டியும் அவர் மகனும் நடிகருமான துல்கர் சல்மானும் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நிவாரண நிதி அளித்துள்ளனர். இதில் மம்மூட்டி சார்பாக 15 லட்சமும், துல்கர் சல்மான் சார்பில் 10 லட்சமும் நிவாரண நிதியாக அளிக்கப்பட்டது.  இந்த நிதி முதலமைச்சர் பொது நிவாரண நிதி பெயருக்கு வழங்கப்பட்டது. மேலும் நடிகர் மோகன் லாலும்   ரூபாய் 25 லட்சம் நிதி அளித்துள்ளார். இப்போது மற்ற நடிகர் நடிகைகளும் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.