பிரதமரின் அழுத்தத்தால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி! மோடி மீது பாயும் காங்கிரஸ்

டெல்லி: பிரதமர் மோடியின் அழுத்தத்தால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருக்கிறது.
பெரும் பரபரப்புக்கு இடையே மகாராஷ்டிராவில் நிலவி வந்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆட்சியமைக்க எந்த கட்சியாலும் பெரும்பான்மையான இடத்தை பெறமுடியவில்லை என்று ஆளுநரின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சிக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜயசிங் கூறி இருப்பதாவது: பிரதமர் மோடியின் கடும் அழுத்தத்தால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி இப்போது அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.
பிரதமர் மோடி, ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்யுங்கள் அம்மாநில ஆளுநருக்கு கடும் அழுத்தம் தந்திருக்கிறார். இதன் மூலம் பாஜக குதிரை பேர அரசியல் விளையாட்டில் ஈடுபட தொடங்கும்.


தனிப்பெரும்பான்மை கொண்ட பாஜகவை முதலில் ஆட்சிமைக்க ஆளுநர் அழைத்தார். அதன்பிறகு 2வது பெரிய கட்சி, 3வது பெரிய கட்சி என்று அழைப்பு விடுத்தார்.
ஆனால், திடீரெனெ ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? மத்திய அரசு தந்த அழுத்தத்தால் ஆளுநர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.


மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் குழப்பத்தை பார்த்து அமித்ஷா அமைதியாக இருக்கிறார். ஆட்சியில் சமபங்கு என்பதை அவர் வாக்குறுதியாக அளித்திருக்கிறார் என்பதாக காட்டுகிறது.
சிவசேனாவுக்கு பாஜக துரோகம் செய்து இருக்கிறது. பெரும் அநீதி இழைத்திருக்கிறது என்று கூறினார்.