டில்லி

ருவமழையின் காரணமாக டில்லி காற்றில் மாசு குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகில் அதிக மாசு படிந்த நகரங்களில் டில்லியும் ஒன்றாகும். உலக சுகாதார மையத்தின் தகவலின்படி இந்தியாவில் காற்று மாசடைந்த நகரங்களில் டில்லி முதலிடம் வசித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள வாகனப்புகை மற்றும் தொழிற்சாலை மாசுகள் எனக் கூறப்பட்டாலும் நகரில் உள்ள குப்பை கூளங்களைக் கூட்டுவதால் உண்டாகும் மாசு அதை விட அதிகம் எனக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக டில்லியில் பருவ மழை பெய்து வருகிறது. இதனால் நகரக் குப்பைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அத்துடன் மாசு அளவும் வெகுவாக குறைந்துள்ளன. தற்போது காற்றின் மாசு அளவுக் குறியீடு 50 முதல் 100 வரை உள்ளது. இந்த மாசுக் கட்டுப்பாடு அளவுக் குறியீடு கடும் மோசம், மோசம், பரவாயில்லை மற்றும் திருப்திகரம் என வகைப்படுத்தப் படும்.

தற்போதைய குறியீடானது திருப்திகரம் என்னும் நிலையில் உள்ளது. கடந்த வருடம் முதல் இந்த மாசு அளவுக்குறியீடு கடும் மோசம் என்பதற்கும் அதிகமாக இருந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை எனச் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.