மார்பிங் போட்டோவால் மனம் உடைந்து தற்கொலை செய்த காதல் ஜோடி

டலூர்

னது புகைப்படத்தை மார்பிங் செய்து ஒரு இளைஞர் ஆபாசமாக வெளியிட்டல்தால் தற்கொலை செய்துக் கொண்ட பெண்ணின் காதலரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கடலூர் மாவட்டட்தில் குறவன் குப்பத்தை சேர்ந்த 19 வயதுப் பெண் ராதிகா.   இந்த ஊர் நெய்வேலி அருகே உள்ளது.  ராதிகா ஒரு தனியார் கல்லூரியில் பிசிஎ இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஆவார்.   இவரது அத்தை மகனான விக்னேஷ் என்னும் 23 வயது இளைஞர் இந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.   அதே கிராமத்தை சேர்ந்த பிரேம்குமார் என்னும் இளைஞர் விக்னேஷின் நண்பரின் தங்கையை காதலித்து வந்தார்.

ஒரு நாள் யாரும் இல்லாத நேரத்தில் பிரேம்குமார் தனது காதலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.    இதனால் ஏற்பட்ட பிரச்னை காவல்நிலையம் வரை சென்றுள்ளது.  பிரேம்குமார் தனது காதலியை வீட்டுக்கு அழைத்துச் சென்றதை பார்த்த விக்னேஷ் காவல்நிலையத்தில் சாட்சி அளித்துள்ளார்.    அதை ஒட்டி பிரேம்குமார் கைது செய்யப்பட்டார்.

அதன் பிற்கு ஜாமீனில் வந்த பிரேம்குமார் தனக்கு எதிராக சாட்சி அளித்த விக்னேச் மீது கடும் கோபம் கொண்டார்.   அப்போது விக்னேஷுக்கும் ராதிகாவுக்கும் இடையில் உள்ள காதலை அறிந்த பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் பேசினார்கள்.   இது பிரேம்குமாருக்கு மேலும் ஆத்திரம் மூட்டியது.

அவர் ராதிகா தனது முகநூலில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை எடுத்து மார்பிங் செய்து ஆபாச புகைப்படமாக மாற்றி முகநூலில் வெளியிட்டுள்ளார்.   இதனால் மனமுடைந்த ராதிகாவை அவர் உறவினர்கள் முகநூலில் புகைப்படம் பதிந்ததற்காக திட்டி உள்ளனர்.   ராதிகா யாரும் இல்லாத வேளையில் கடந்த திங்கட்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இந்த செய்தி ராதிகாவின் காதலரும் அத்தை மகனுமான விக்னேஷை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.   தன்னால் ராதிகா மரணம் அடைந்ததாக புலம்பிக் கொண்டிருந்த விக்னேஷ் வடலூரை அடுத்த செங்கல் பாளையம் சாலை ஓரத்தில் இருந்த ஒரு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

இரு தினங்கள் தலைமறைவாக இருந்த பிரேம்குமார் அதன்பிறகு காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: committed suicide, cuddalore lovers, Morphing photos
-=-