போபால்

னது சாபத்தால் காவல் அதிகாரி ஹேமந்த் கர்கரே தனது சாபத்தால் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்ஞா கூறி உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் கடந்த 2008 ஆம் தேதி அஜ்மல் கசாப் உள்ளிட்ட தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் தவிர மற்றவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் பிடிபட்டு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தீவிரவாதிகளை எதிர்த்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கையும் ஹேமந்த் விசாரித்து வந்தார். ஆறு பேர் கொல்லப்பட்ட அந்த குண்டு வெடிப்பு நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்வி பிரக்ஞா தாகுருக்கு சொந்தமானது என்பதால் அவர் கைது செய்யப்பட்டார். அவரைப் போல் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்ட சாத்வி 2016 ஆம் ஆண்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

தற்போது போபால் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கை எதிர்த்து போட்டியிட உள்ள சாத்வி பிரக்ஞா தாகுர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சி இந்துக்கள் என்றாலே பயங்கரவாதிகள் என ஆக்கி பெண்களை கடுமையாக துன்புறுத்தி வருகிறது. நான் ஏற்கனவே என்னை கொடுமைப்படுத்தியவர்கள் பெயரை குறிப்பிட்டுள்ளேன். இது போல் மற்றொரு பெண்ணுக்கு கொடுமை அனுபவிக்கும் நிலை வர நான் எவ்வாறு விரும்புவேன்?

என்னை உணர்வு ரீதியாகவும் உணவின்றியும் சிறையில் கொடுமை செய்தனர்.  நான் இரவு முழுவதும் அடித்து உதைக்கப்பட்டேன். பல நாட்கள் எனக்கு வெறும் தண்ணீர் மட்டுமே உணவாக அளிக்கப்பட்டது. அப்போது நான் இந்த கொடுமைக்கு காரணமான ஹேமந்த் கர்கரேவுக்கு சாபம் அளித்தேன். அந்த சாபத்தின் விளைவாக அவர் அஜ்மல் கசாப் தீவிரவாத கும்பலால் கொல்லப்பட்டார், அவருடைய வினைப்பயனால் அவர் கொல்லப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தீவிரவாதிகளில் வெறிச் செயல் மூலம் தனது சாபம் நிறைவேறியதாக ஒரு சன்னியாசினி கூறி உள்ளது இந்து மக்களிடையே கடும் வெறுப்பை உண்டாக்கி இருக்கிறது.