தேசிய ஊரடங்கால் கன்யாகுமரி சுற்றுலா வழிகாட்டிகள் வாழ்வாதாரம் இழப்பு

ன்யாகுமரி

சுற்றுலாத் தலமான கன்யாகுமரியில் தேசிய ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா வழிகாட்டிகள்  தங்கள் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ளனர்.

இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள கன்யாகுமரியில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், காந்தி மற்றும் காமராஜர் மண்டபங்கள், விவேகானந்தர் இல்லம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட ஏராளமான இடங்கள் உள்ளன.  சர்வதேச அளவில் சுற்றுலாப்பயணிகளைக் கவர்ந்துள்ள கன்யாகுமரியின் சுற்றுப்புறங்களிலும் பல இடங்கள் அமைந்துள்ளன.

தேசிய ஊரடங்கு காரணமாக தற்போது சுற்றுலாப்பயணிகள் வருவது அடியோடு நின்று போனது.  இங்குள்ள பேருந்து நிலைய நிறுத்தத்தில் சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் உள்ளது.   இந்தச் சங்கம் கடந்த 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.   இந்த சங்கம் மூலம் சுற்றுலா வழிகாட்டிகள் பயணிகளுக்குப் பணி புரிந்து வருகின்றனர்.  தற்போது இங்கு யாருக்கும் பணி இல்லாததால் இவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளது.

சுற்றுலா வழிகாட்டிகள் சங்க நிர்வாகி பெலிக்ஸ், “நாங்கள் 44 பேர் உறுப்பினர்களாக உள்ள இச்சங்கத்தில் குமரி,நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தவர்கள் இடம் பெற்றுள்ளோம்.  முன்பு 60 பேர் உறுப்பினராக இருந்த இந்த சங்கத்தில் கூகுள் மேப் வந்த பிறகு வெகுவாக வழிகாட்டிகள் குறைந்து விட்டனர்.  தேசிய ஊரடங்கால் இருப்பவர்களுக்கும் பணி இல்லாத நிலை உள்ளது.  எனவே அரசு எங்களுக்கு நிதி உதவி அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.