பாரபன்கி, உத்தரப் பிரதேசம்

த்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஊதிய வெட்டு காரணமாக  30 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரபன்கி பகுதியில் மாயோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிவல் சயின்சஸ் என்னும் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது.  இந்த மருத்துவக் கல்லூரியுடன் 750 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனையும் இயங்கி வருகிறது.  இங்கு 200 மருத்துவர்கள் பணி புரிகின்றனர்.

கடந்த மாத இறுதியில் இந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகம் 30 மருத்துவர்களைக் கட்டாய விடுமுறை எடுக்குமாறு வற்புறுத்தி அந்த நாட்களில் இவர்களுக்கு ஊதிய வெட்டு அளித்துள்ளது.   இதனால் மன வருத்தம் அடைந்த மருத்துவர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் செவி சாய்க்கவில்லை.  எனவே இந்த 30 பேரும் பணியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

இதையொட்டி அங்குள்ள மருத்துவர்கள் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். இவர்கள் தங்கள் போராட்டத்துக்கு மூன்று காரணங்கள் தெரிவித்துள்ளனர்.

அவை

  1. கொரோனா பரவி வரும் வேளையில் தேவை இல்லாமல் ஊதிய வெட்டு செய்தது.
  2. மேலும் பல பெயர்களில் பல பிடித்தங்கள்
  3. நிர்வாகத்தின் தொடர்ந்த ஒழுக்கமற்ற மற்றும் ஒப்புக்கொள்ள முடியாத நடவடிக்கைகள்

எனப் பட்டியலிடப்பட்டுள்ளன.