மும்பை

ஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டால் பல பாஜக அனுதாபிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி வாராக்கடன்கள் அதிகரிப்பால் கடும் இழப்பை சந்தித்துள்ளது.   இந்த வங்கி பாஜக தலைவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.   நிர்வாக சீர்கேட்டினால் கடன்கள் போதுமான உத்திரவாதம் இன்றி கொடுக்கப்பட்டதால் அவை வாராக் கடன்கள் ஆகி உள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது ரிசர்வ் வங்கி இந்த கூட்டுறவு வங்கிக்குப் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.  அவற்றில் முக்கியமானவை மேற்கொண்டு கடன் அளிக்கக்கூடாது என்பதும் தினம் ரூ.1000க்கு மேல் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து எடுக்கக் கூடாது என்பதுமே ஆகும்.     இதனால் பல வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை அவசர தேவைகளுக்கும் எடுக்க முடியாத நிலை உண்டாகி இருக்கிறது.

முன்பு இந்த வங்கியின் நிர்வாகிகள் அனைவரும் தங்களைப் பிரதம மந்திரியின்  காவலர்கள் எனப்  பல முறை அறிவித்துள்ளனர்.   தற்போது வங்கி வாசலில் கூடிப் போராடும் வாடிக்கையாளர்களிலும் ஏராளமான பாஜக அனுதாபிகள் உள்ளனர்.  அவர்கள் தற்போது பிரதமரின் காவலர்களான வங்கி நிர்வாகிகள் மேல் நம்பிக்கை இழந்துள்ளனர்.

வங்கி வாசலில் ஒரு பாஜக அனுதாபியான வாடிக்கையாளர் குமுறும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.

[youtube https://www.youtube.com/watch?v=v0zs8O6lhsE?feature=youtu]