சென்னை

யணிகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் சென்னை மெட்ரோ தனது ஞாயிற்றுக்கிழமை சேவை நேரங்களை அதிகரித்துள்ளது.

சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.   தற்போது அது மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.  முன்பு மிகவும் குறைந்த அளவில் பயணிகள் இருந்த நிலையில் தற்போது பயணிகள் அதிகரித்து வருகின்றனர்.   வார நாட்களில் சுமார் 1.2 லட்சம் பயணிகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 70000 பயணிகளும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.

இந்த எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரெயில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   தற்போது நெரிசல் நேரங்களில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் எனவும் நெரிசல் அற்ற நேரங்களில் 7 அல்லது 15 நிமிடங்களுக்கு ஒரு முறையும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.    கடந்த செப்டம்பர் மாதம் 2.5 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என சோதனை ஓட்டம் நடந்து வெற்றி பெற்றுள்ளது.   இது விரைவில் அமலுக்கு வர உள்ளது.

தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் மெட்ரோ ரெயில் சேவை காலை 8 மணி முதல் இரவு 10 வரை  இயங்கி வந்தன.   இனி அந்த சேவை காலை 6 மணியில் இருந்து இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது   அத்துடன் ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிகளுக்குக் கட்டணத்தில் 50% சலுகை வழங்க உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.