சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!

சென்னை:

வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்று (30ம் தேதி ) ஒரு மணி நேரத்திற்கு முன்பே மாணவ மாணவிகள் வீட்டுக்கு அனுப்ப கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவிட்டார்.

மேலும், தொடர் மழை காரணமாக நாளை (31ம் தேதி ) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டள்ளனர்