Random image

சபரிமலை பிரச்னை எதிரொலி : குடியரசு தின ஊர்வலத்தில் கேரள அரசு ரதத்துக்கு தடை

டில்லி

ரும் குடியரசு தினத்தன்று நடைபெற உள்ள ஊர்வலத்தில் கேரள அரசு அமைக்க உள்ள ரதத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

                          சென்ற வருட குடியரசு தின ஊர்வல அணிவகுப்பு

ஒவ்வொரு வருடமும் நடக்கும் குடியரசு தின ஊர்வலத்தில் ஒவ்வொரு மாநிலத்தின் சார்பிலும் ரதங்கள் அமைக்கப்பட்டு ஊர்வலத்தில் வரிசையில் வரும்.   அந்தந்த  மாநிலங்கள் தங்கள் மாநிலத்தின் சிறப்பை எடுத்துக் காட்டும் வகையில் ரதங்கள் அமைப்பது வழக்கம்.    மாநிலங்கள் அமைக்க உள்ள ரதம் குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கு அனுமதிக்காக அனுப்பப் படுவது வழக்கமாகும்

அவ்வகையில் கேரள அரசு இந்த வருடம் ”அனைவருக்கும் ஆலயம்” என்னும் தலைப்பில் ரதம் அமைக்க உள்ளதாக தெரிவித்திருந்தது.   வைக்கம் நகரில் முன்பு நடந்த ஆலயப் பிரவேச அனுமதி முதல்  அனைத்து ஆலயப் பிரவேச நிகழ்வுகளும் சித்தரிக்க உள்ளதாக கேரள அரசு தெரிவித்திருந்தது.

அந்த ரதத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்துள்ளது.   மத்திய அரசு சார்பில் ஏற்கனவே இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தது.    ஆனால் தங்களுக்கு அவ்வாறு எந்த உத்தர்வும் வரவில்லை என கேரல அரசு மறுத்துள்ளது.   ரதத்தில் வைக்கம் ;போராட்டத்தை சித்தரிக்க அனுமதி அளித்ததுடன் வேறு பல மாறுதல்கள் செய்ய மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளதாக கேரள அரசு கூறியது.

இந்நிலையில் இன்று மத்திய அரசால் ரதங்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட மாநில பிரதிநிதிகளின் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது.   அந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள கேரள அரசுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.   இது குறித்து கேட்டதற்கு கேரள அரசின் ரதத்டுக்கு அனுமதி வழங்கவில்லை என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மத்திய அரசு சரியான காரணம் தெரிவிக்கவில்லை.   இருப்பினும் பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர், “தற்போது சபரிமளையில் இளம்  பெண்கள் அனுமதிப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் கேரளாவில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.   இந்நிலையில் இந்த ரதத்தை அனுமதிப்பதால் மேலும் அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க அரசு இந்த ரதத்தை தேர்வு செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.