சீனா : கடும் குளிரில் உறைந்து பனிக்கட்டி ஆன அருவிகள்

பீஜிங்

சீனாவில் கடும் குளிர் நிலவுவதால் அருவிகள் உறைந்து பனிக்கட்டி ஆகி உள்ளன.

இந்த வருடம் தற்போது குளிர் காலம் கடுமையாக உள்ளது.  இந்த நிலை இந்தியாவை மட்டுமின்றி அண்டைநாடான சீனாவையும் கடும் பாதிப்பில் ஆழ்த்தி உள்ளது.  பலத்த காற்று வீசுவதால் பொதுமக்களுக்குச் சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீன நாட்டு வானிலை ஆய்வு மையம் கடும் குளிரை முன்னிட்டு அந்நாட்டுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த குளிர் மேலும் அதிகரிக்கும் எனவும் குளிர் காற்று மேலும் தீவிரமடையும் எனவும் வானிலை மயம் எச்சரித்துள்ளது.

சீனாவில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக அங்குள்ள அருவிகள் நீர் உறைந்து பனிக்கட்டிகளாக மாறி உள்ளன.   அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த குளிரினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.