தப்புக் கணக்கு’ போட்ட ஊழியர்..  தப்பி ஓடிய கொரோனா நோயாளி..


மருத்துவமனை ஊழியர் செய்த தவற்றால், கொரோனா நோயாளி ஒருவர் தப்பி ஓடி விட்டார்.

டெல்லியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் புதுச்சேரிக்கு நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தார்.

பின்னர் விழுப்புரம் சென்ற அவர், ஊரடங்கு காரணமாக ஊர் செல்ல முடியவில்லை.

செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த முகாமில் தங்கி இருந்தார்.

காய்ச்சல் இருந்ததால் அவர் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கடந்த 7 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது..

‘’ டெல்லி நபரின், ரத்தப் பரிசோதனை நிலுவையில் உள்ளது’’ என்று பரிசோதனை கூடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.

கம்யூட்டரில் பரிசோதனை தரவுகளை ஏற்றிய மருத்துவமனை ஊழியர், ‘டெல்லி காரருக்கு வைரஸ் அறிகுறி இல்லை’’ என தவறுதலாகப் பதிவு செய்ய-  அவரை செஞ்சிலுவைச் சங்க முகாமுக்கு அனுப்பி விட்டார்கள்.

அதன் பிறகு வந்த ரிசல்டில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பதறிப்போன மருத்துவமனை ஊழியர்கள், அந்த முகாமுக்குப் போய் விசாரித்துள்ளனர்.

டெல்லிவாலா , அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது தெரியவந்துள்ளது.

எங்கே போனார் டெல்லிவாலா ?

7 படைகள் அமைத்து,  அவரை மாவட்டம் முழுக்க வலை வீசி தேடி வருகிறது, போலீஸ்.

–  ஏழுமலை வெங்கடேசன்