சென்னை

ழை நீர் வடிகால்கள் செயல்படாத நிலை உள்ளதால் சென்னை மக்கள் கடும்  போக்குவரத்து நெரிசலால் அவதி அடைந்துள்ளனர்.

நேற்று முதல் சென்னை மற்றும் புறநகர்ப்  பகுதிகளில் விடாமல் கனமழை பெய்தது.   இந்த மழை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   அத்துடன் அடுத்த 24 மணி நேரங்களுக்கு மழை விட்டு விட்டுப் பெய்ய  மிகவும்  வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை நகரின் பல இடங்களில் மழை நீர் வடிகால்கள் சரியாகச் செயல்படாமல்  உள்ளன.  குறிப்பாகச் சென்னையின் பிரதான சாலையான கதீட்ரல் சாலை எழும்பூர், வேப்பேரி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜென்ரல் பாட்டர்ஸ் சாலை ஆகிய சாலைகளில் மழை நீர் வெள்ளமாகத் தேங்கியது.   இதனால்  அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெஇர்சல் ஏற்பட்டது.

நேற்று பெய்த ஒருநாள் மழையால் சென்னை எழும்பூரிலுள்ள கெங்கு ரெட்டி பாலத்தில் மழை நீர் அதிக அளவில் தேங்கி அந்த பாலம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.   அது மட்டுமின்றி, அடையாறு, தேனாம்வ்பேடை, ராயபுரம், தண்டையார்பேட்டை போன்ற பகுதிகளில் மழை நீர் தேக்கம் அதிக அளவில் உள்ளது.

சென்னை மாநகராட்சியின் தகவல்படி நகரின் 480 இடங்களில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.    நிலத்தில் மழை நீர் தேங்காமல் வடிந்து செல்ல அமைக்கப்பட்ட  வடிகால்கள் முறையாகப் பராமரிப்பு செய்யப்படாததால் இந்நிலை உண்டானதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.   மேலும் இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் இதனால் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.