பன்றிக் காய்ச்சல் : அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

டில்லி

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பன்றிக் காய்ச்சல் அறிகுறியால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா. இவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் நெஞ்சடைப்பு காரணமாக் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

அப்போது அவருக்கு பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் இருந்துள்ளது. ஆகவே அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தனக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அமித்ஷா தனது டிவிட்டரில் பதிந்துள்ளார்.

அமித்ஷா தனது டிவிட்டரில், “எனக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சைகள் நடந்துக் கொண்டு உள்ளன. கடவுள் அருளாலும், உங்கள் அன்பு மற்றும் ஆசிகளாலும் நான் விரைவில் குணமடைவேன்” என பதிந்துள்ளார்.