தண்டவாள பராமரிப்பு பணி : ரெயில் சேவை நேர மாற்றம்

சென்னை

ண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் – ஜோலார்ப்பேட்டை – அரக்கோணம் ஆகிய தடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதன் காரணமாக இன்றும், நாளை மறு நாளும் அதாவது அக்டோபர் 22 மற்றும் 24 தேதிகளில் ரெயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் ரெயில்சேவை நேரங்களில் கீழ்க்கண்ட மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

திங்கள்கிழமை மாற்றம் செய்யப்படும் ரயில்கள்: சென்னை சென்ட்ரல் -மங்களூருக்கு திங்கள்கிழமை நண்பகல் 12.05 மணிக்கு புறப்படும் மேற்கு கடற்கரை விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் 2 மணி நேரம் நின்று செல்லும். மும்பை சிஎஸ்டி – நாகர்கோவிலுக்கு செல்லும் விரைவு ரயில் சோமநாயக்கன்பட்டியில் 3 மணி நேரம் நின்று செல்லும். ஜோலார்பேட்டை-ஈரோடுக்கு பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரயில் நேரம் மாற்றப்பட்டு, மாலை 5.30 மணிக்கு இயக்கப்படும்.

புதன்கிழமை மாற்றப்படும் ரயில்கள்: சென்னை சென்ட்ரல் -மங்களூருக்கு புதன்கிழமை நண்பகல் 12.05 மணிக்கு புறப்படும் மேற்கு கடற்கரை விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் 2 மணி நேரம் நின்று செல்லும். கே.எஸ்.ஆர். பெங்களூரு – கோவைக்கு பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் உதய் விரைவு ரயில் சோமநாயக்கன்பட்டியில் 30 நிமிஷம் நின்று செல்லும். ஜோலார்பேட்டை-ஈரோடுக்கு பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரயில் நேரம் மாற்றப்பட்டு, மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு செல்லும்”

என குறிப்பிடப்பட்டுள்ளது.