கும்பலை கூட்டி கல்யாணம்: மணமக்கள் உள்ளிட்ட 43 பேருக்கு கொரோனா..

--

கும்பலை கூட்டி கல்யாணம்: மணமக்கள் உள்ளிட்ட 43 பேருக்கு கொரோனா..

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள செங்கலா பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நடந்த ஒரு திருமணத்தில் பெரும் கும்பலே பங்கேற்றுள்ளது.

50 பேர் மட்டுமே கல்யாணத்துக்கு அனுமதி என ஊரடங்கு விதியில் கோடிட்டு காட்டப்பட்டுள்ள நிலையில், காசர்கோடு திருமணத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர், திரண்டுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற கொரோனா முகாமில் மணமகன் தந்தைக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கல்யாணத்துக்கு வந்த அனைவருக்கும் பரிசோதனை செய்த போது  43 பேருக்கு தொற்று இருப்பது நேற்று ஊர்ஜிதம் ஆனது.

யாரோ, எங்கிருந்தோ கொண்டு வந்திருந்த கொரோனா வைரஸ், மணமக்கள் உடம்புக்குள்ளும் பாய்ந்திருந்தது, சோகத்தின் உச்சம்.

மணமக்கள் உள்ளிட்ட அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்த ஆணையிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் சாஜித் பாபு, இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு ஆணையிட்டுள்ளார்.

-பா.பாரதி.