துல்கரின் ‘குரூப்’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் மட்டும் விழாக் கால பரிசாக இப்போது வெளியாகியிருக்கிறது.
35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமான முறையில் இப்படம் உருவாகியிருக்கிறது.
துல்கரின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான வேஃபேரர் ஃபிலிம்ஸ், எம்.ஸ்டார் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து ‘குரூப்’ படத்தை தயாரித்திருக்கிறது.
ஜிதின் கே.ஜோஸ் கதை வசனம் எழுதியிருக்கும் இப்படத்துக்கு டேனியல் செயூஜ் நாயர் மற்றும் கே.எஸ்.அரவிந்த் திரைக்கதை அமைத்திருக்கின்றனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சுஸின் ஷ்யாம் இசையமைத்திருக்கிறார்.
ஷோபிதா துலிப்பாலா நாயகியாக நடித்திருக்கும் குரூப் படத்தில் இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ, விஜயராகவன், பி.பாலசந்தரன், சுரபி லட்சுமி மற்றும் சிவாஜித் பத்மநாபன் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
துல்கரின் முதல் படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இப்படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.