மருத்துவமனையில் துரைமுருகன்: மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரிப்பு

சென்னை:

போரூர் மருத்துவமனையில் உடல்நலமின்றி அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொருளாளா் துரைமுருகனை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

திமுக எம்எல்ஏவும், பொருளாளருமான  துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக போரூா் ராமச்சந்திரா மருத்துவ மனையில்  அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.

துரைமுருகன் நலமுடன் இருப்பதாக அவரது மகன் கதிர்ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு துரைமுருகனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். திமுகவின் முக்கிய நிா்வாகிகளும் துரைமுருகனிடம் நலம் விசாரித்தனா்.