மரம் வளர்த்து வருவதற்காக ‘பசுமை காவலர்’ பட்டம் பெற்றார் துரைமுருகன்

சென்னை:

தி.மு.க. முதன்மை செயலாளரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான துரைமுருகனுக்கு பசுமை காவலர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த பட்டத்தை சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சென்னை மாநகர மேயருமான மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

நாடு முழுவதும் காற்றில் ஏற்படும்  மாசை தடை செய்யும் வகையில் மலர்கள், செடிகள்  வளர்க்க அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.  திமுகவிலும் மரங்களை வளர்க்க பசுமை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  பசுமை சைதை திட்டத்தின் கீழ் கடந்த  ஓராண்டாக சிறப்பாக மரம் வளர்த்து வரும் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகனுக்கு பசுமை காவலர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டத்தை சைதை தொகுதியில் மரங்கள் வளர்த்து பராமரித்து வரும், பசுமை சைதை என்ற திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், துரைமுருகனுக்கு பட்டமும், சான்றிதழும் வழங்கி கவுரவித்தார்.

மேலும் சிறப்பாக மரங்கள் வளர்த்து வரும் 5 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.