துரைமுருகனே திமுக பொருளாளராக நீடிப்பார்… ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:

ழக பொருளாளர் பொறுப்பில் திரு. துரைமுருகன் எம்எல்ஏ அவர்களே  நீடிப்பார்” – என்று திமுகழக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

திமுகவில் ஒவ்வொரு பதவிக்கும் பொறுப்பாளர்கள் கட்சி தேர்தல்கள் மூலமே தேர்வு நடத்தப்படுவது வழக்கம். சமீபத்தில் திமுக பொதுச்செயலாளராக இருந்து அன்பழகன் மறைந்ததைத் தொடர்ந்து, அந்த பதவிக்கான இடம் காலியாக உள்ளது. இந்த பதவிக்கு திமுக எம்எல்ஏ துரைமுருகன் போட்டியிடப்போவதாக அறிவித்து, தனது பொருளாளர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

ஆனால், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  தேர்தல் நடத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, துரைமுருகனே திமுக பொருளாளராக தொடர திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.