ஜம்மு:

ம்மு-காஷ்மீரின் தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ப 6 மாதத்திற்கு ஒருமுறை தலைமைசெயலகம் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 6 மாதமாக காஷ்மீரில் இயங்கி வந்த தலைமைசெயலகம் தற்போது ஸ்ரீநகருக்கு மாற்றப்பட்டுள்ளது. நாளை முதல் ஸ்ரீநகரில் அரசின் தலைமை செயலகம் இயங்கும்.

மே மாதம் முதல் அக்டோபர் மாதம்வரை கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரும், மற்ற மாதங்களில் குளிர்கால தலைநகராக ஜம்முவும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வருகின்றன. இதனால் நிதி இழப்பு ஏற்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், தொடர்ந்து மாற்றப்பட்டுத்தான் வருகிறது.

எதற்காக இந்த மாற்றம்.. மாற்றியது யார்…?

1872-ம் ஆண்டில் அப்போது காஷ்மீர் பகுதியை ஆண்டு வந்த  குலாப் சிங் என்ற ராஜாதான் இவ்வாறு  6 மாதம் குளிர்கால தலைநகரமாக ஜம்முவையும், 6 மாத கோடைக்கால தலைநகராக ஸ்ரீநகரையும் அறிவித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இவ்வாறு தலைநகரை மாற்றுவதற்கு  தர்பார் மாற்றம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இதன்படி, தலைமைச்செயலகம், மாநில கவர்னர் மாளிகை உள்பட அனைத்து அரசு துறை அலுவலகங்களும் இடமாற்றம் செய்யப்படுவது சுமார் நூறாண்டுகால நடைமுறையாக இருந்து வருகிறது. அதுவே  இன்றுவரை தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு தலைநகரை 6 மாதத்திற்கு ஒருமுறை மாற்றுவதால் மாநில அரசுக்கு ஏறக்குறைய 40 கோடி ரூபாய் அளவுக்கு பணம் விரயமாகிறது என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.