2018-ம் ஆண்டு அனுஷ்கா நடிப்பில் வெளியான படம் ‘பாகமதி’. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கின்றனர் .

‘பாகமதி’ படத்தை இயக்கிய ஜி.அசோக்கே இந்தி ரீமேக்கையும் இயக்குகிறார். அனுஷ்கா கதாபாத்திரத்தில் புமி பெட்னேகர் நடித்து வந்தார்.

‘துர்காவதி’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. ‘துர்காவதி’ படத்தை அக்‌ஷய் குமார், விக்ரம் மல்கோத்ரா மற்றும் பூஷண் குமார் மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.