கொழும்பு:

டந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை காவல்துறையினர் வேட்டை யாடி வருகின்றனர்.

இந்த நிலையில், எரகண்டி, திரிகோணமலை கடற்கரை  பகுதியில் இருந்து  மோட்டார் சைக்கிளுடன்  ஏராளமான வெடிகுண்டுகளுடன் ஒருவனை  கடற்படையினர் கைது  உள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் நடைபெற்ற வந்த அதிரடி சோதனை காரணமாக  20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை அரசு  நாட்டின் பாதுகாப்பு நிலைமை கருதி 8 மாகாணங்களில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,  நாட்டின் அனைத்து பகுதிகளிலும் விசேச  சோதனை நடவடிக்கையில் முப்படையினரும் காவல்துறையினரும் ஈடுபட்டு வருவதாகவும் அறிவித்து உள்ளது.

திரிகோணமலை கடற்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையின்போது, அங்கு சந்தேகத்திற்கு கிடமாக காணப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார். அவர் வைத்திருந்தமோட்டார் சைக்கிளை  பறிமுதல் செய்த கடற்படையினர், அதை ஆய்வு செய்தபோது, அதில் , 130 கிராம் எடையுள்ள 51 வெடிகுண்டுகள், மேலும் 215 டெட்டனேட்டர்கள் ஆகியவை இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதைத்தொடர்ந்து, அந்த நபரையும், கைப்பற்றப்பட்ட வெடிமருந்து குவியல்களையும், குச்சவெளி பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைத்தனர். இதை  இலங்கை கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளனார்.

அதேவேளையில்,  ஐ. ஏஸ். ஸஹாரானின் உறுப்பினர்களுக்கு ராணுவ பயிற்சியளித்து வந்து தொடர்பாக  தலைமறைவாகியிருந்தவரின்  வீட்டை சுற்றிவளைத்தபோது அவர் தப்பி ஓட முயற்சித்த நிலையில் அவரை முனையில் காவல்துறையினர் கைது செய்ததாகவும்,  அவர்,  மட்டக்களப்பு கும்புறுமூலை பகுதியை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர்  ஆமிமுகைதீன் என்றும்  இவர் ஐஎஸ் ஸஹாரானின் உறுப்பினர்களுக்கு குண்டு தயாரிப்பது மற்றும் இராணுவ பயிற்சியளித்து வந்ததாகவும், இவரை காவலத்துறையினர் தேடி வரும் தகவல் கிடைத்த நிலையில், அவர் தலைமறைவாகி இருந்த நிலையில் காவல்துறையினர் மடக்கியதாகவும் கூறப்படுகிறது.

தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் குறித்து சந்தேகத்தின் பேரில் கலஹாவில் ஒருவர் கைது செய்யபட்டு இருப்பதாகவும், அவரிடம் இருந்து  123 கையடக்க தொலைபேசிகள் ,324 பேட்டரிசெல்கள்  மற்றும் பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை காவல்துறை அறிவித்து உள்ளது.

கிரான்பாஸ் என்பவர்  சேதவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரிட்ம் இருந்து  துப்பாக்கிகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இலங்கையில் பறிமுதல் செய்யப்படும் ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் பலர் கைது செய்யப்பட்டு வருவதும் நாட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.