ராகுல் காந்தியின் விமானம் 20 நொடிகளில் விபத்திலிருந்து தப்பியது : ஆய்வு அறிக்கை

டில்லி

டந்த ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று ராகுல் காந்தி சென்ற விமானம் 20 நொடிகளில் விபத்தில் இருந்து தப்பியதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த ஏப்ரல் மாத்ம் 26 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டில்லியில் இருந்து ஹூப்ளிக்கு ஒரு தனி விமானத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.   அப்போது ராகுல் காந்தி சென்ற அந்த விமானம் விபத்துக்குள்ளாக இருந்தது.   இதில் சதி வேலைகள் இருக்கலாம் என காங்கிரஸ் சந்தேகம் எழுப்பியது.

அதை ஒட்டி இந்த விபத்து குறித்து விசாரணை செய்யப்பட்டது.   அந்த விசாரணையின்  போது ராகுல் காந்தி சென்ற விமானம் 20 நொடிகளில் தப்பியதாக தெரிய வந்துள்ளது.   இந்த விமானம் விபத்துக்குள்ளாக இருந்தது தொழில் நுட்பக் காரணங்களால் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விசாரணை அறிக்கையில், “விமானம் ஒரு புறமாக அதிகம் சரிந்ததால் கீழே மோத இருந்தது.   தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் தானியங்கி இயக்கத்துக்கு சென்றிருந்தது.   விமான ஓட்டிகள் உடனடியாக அதை மாற்றியதால் அவர்களால் விமானத்தை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது.   அதை அவர்கள் இருபது நொடிகளில் மாற்றி உள்ளனர்.  இல்லையெனில் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கும்” என குறிப்பிடப் பட்டுள்ளது.