டில்லி

போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்த கோவாவை சுதந்திர இந்தியாவுடன் 1961 ல் இணைக்கப்பட்ட போது அதை அமெரிக்காவும் போர்ச்சுகீசியாவும் எதிர்த்தன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கோவா மாநிலம் போர்ச்சுகீசியரின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது.   கடந்த 1961 ஆம் வருடம் இந்தியா அந்தப் பகுதியை போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து விடுவித்து சுதந்திரம் பெற்றுத் தந்து இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது.   அப்போது கோவா பகுதியை ஆண்டு வந்த போர்ச்சுகீசியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போர் தொடுக்க முயன்றது. அதற்கு அமெரிக்கா துணை நின்றது

வட அட்லாண்டிக் நாடுகள் அமைப்பைச் சேர்ந்த போர்ச்சுகீசியா தனது  கடற்படையை சூயஸ் கால்வாயைத் தாண்டிக் கொண்டு வந்து இந்தியக் கடற்படையுடன் போரிட முற்பட்டது.  அப்போது மற்ற வட அட்லாண்டிக் நாடுகள் அமைப்பின் படைகள் இந்தியாவின் துணைக்கு வந்தன.

சூயஸ் கால்வாய் விவகாரத்தில் கடந்த 1956 ஆம் வருடம் எகிப்துக்கு இந்தியா ஆதரவு அளித்திருந்தது.   அப்போது பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் இணைந்து எகிப்து  அதிபர் நாசரைத் தோற்கடித்து சூயஸ் கால்வாயைக் கைப்பற்ற முயன்றது.   அந்த நேரத்தில் தன்னை காப்பாற்றியதற்காக எகிப்து அதிபர் நாசர் இடை புகுந்து போர்ச்சுகீசியா மற்றும் அமெரிக்க கூட்டு முயற்சியை முறியடித்தார்.

அப்போது அரபு நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்த  நிலையில் எகிப்து இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டது அமெரிக்காவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியது.   அத்துடன் அப்போது பலம் பொருந்திய நாடான சோவியத் யூனியன் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததால் அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்தியாவின் உதவியை அதிபர் கோருவது குறிப்பிடத்தக்கதாகும்.