சென்னை

தொடர்ந்து ஆறு நாளாக தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படவில்லை.     மாறாகக் கடந்த 83 நாட்கள் மாறுதல் இல்லாமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை 7 ஆம் தேதி உயர்த்தப்பட்டது.

அதன் பிறகு தொடர்ந்து விலை உயர்த்தல் நடந்து வருகிறது.  நேற்று ஐந்தாம் நளாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரு.53 காசு மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.51 காசு உயர்த்தப்பட்டது.  இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.78.47க்கு விற்கப்படுகிறது   டீசல் விலை லிட்டருக்கு 50 காசுகள் உயர்ந்து லிட்டர் ரூ.71.14 க்கு விற்கப்படுகிறது.

கடந்த 6 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சுமார் மூன்று ரூபாய் விலை உயர்ந்துள்ளது.