ஊரடங்கிலும் அடங்காத பலாத்காரம்..  இளம் சிறார்களின் பாலியல் வெறியாட்டம்….

ஊரடங்கிலும் அடங்காத பலாத்காரம்..  இளம் சிறார்களின் பாலியல் வெறியாட்டம்….

புதன்கிழமை அன்று இரவு எட்டு மணிவாக்கில் பாதர் நகரிலிருந்து அண்ணன், தங்கை இருவர் தங்களின் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர்.  அப்போது ஏழு பேர் அடங்கிய ஒரு கும்பல் இவர்களைத் துரத்திச்சென்று ஓரிடத்தில் மடக்கிப் பிடித்து 21 வயது அண்ணனை அடித்து உதைத்து இழுத்துச்சென்று அருகிலிருந்த ஒரு கிணற்றில் தள்ளிவிட்டுவிட்டு, 18 வயதான சிறுமியை அருகிலுள்ள காட்டிற்குள் தூக்கிச்சென்று கற்பழித்துள்ளனர்.

இக்கொடூர சம்பவம் போபாலை அடுத்த, பெடூல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.  கொட்வாலி காவல் அதிகாரி  ராஜேந்திர துர்வே, “ஊரடங்கினால் ஆள் நடமாடடம் இல்லாமல் போனது இந்த கும்பலுக்கு மிகவும் சாதகமாகப் போனது.  அப்பெண்ணைக் கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக நாசம் செய்துள்ளனர் இந்த நாசக்காரர்கள்” என்கிறார்.

மேலும் இவர் கூறுகையில், “சுமார் 1 மணியளவில் அவரது அண்ணன் கிணற்றிலிருந்து எப்படியோ மேலே ஏறி வந்து பக்கத்துக் கிராமத்தினரை உதவிக்கு அழைத்து அந்த பகுதிகளில் தேடியுள்ளார். ஆனாலும் அந்த இருளில் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறியுள்ளனர் இவர்கள் அனைவரும்.  அந்த நேரத்தில் இந்த கும்பலில் ஒருவன் அப்பெண்ணைத் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு இறக்கிவிட வந்துள்ளான்.

அப்போது கிராமத்தினர் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.  எனினும், அக்கும்பலைப் பற்றிய தகவல்கள் மற்றும் பெயர்களைச் சொன்ன இவன் எப்படியோ அந்த இருட்டில் தப்பி ஓடிவிட்டான்.  பின்னர் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தேடுதல் நடத்தி அதில் ஐந்து பேரைக் கைது செய்துள்ளோம்” என்று விவரிக்கிறார் நடந்த சம்பவத்தை…

கைது செய்யப்பட்ட ஐந்து பேர்களில் மூவர் 18 வயதுகுட்பட்ட இளம் சிறார்கள்  என்பது மேலும் வேதனையான விசயமாகும்.

– லெட்சுமி பிரியா