இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய ஸீராலஜிகல் கணக்கெடுப்பின்படி, 18-45 வயதுக்குட்பட்டவர்களில் (43.3 சதவீதம்) ஸீராலஜி-பாசிட்டிவிட்டி மிக அதிகமாக இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து 46-60 வயதுக்குட்பட்டவர்கள் (39.5 சதவீதம்) இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அதன் ஸீராலஜிகல் கணக்கெடுப்பின் முடிவுகளை மேற்கோள் காட்டி, செப்டம்பர் 11 அன்று செய்தி வெளியிட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்), அந்த செய்தியில் மே மாதத்திற்குள்ளாகவே இந்தியாவில் 64 லட்சம் பேர் ஏற்கனவே கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் முறையாக பரிசோதிக்கப்படவில்லை என்றும், அவர்கள் உடலில் கொரோனாவிற்கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளன என்றும் கூறியுள்ளது.  மேலும் இதைப் பற்றி குறிப்பிட்ட ஐசிஎம்ஆர், மே மாதத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு COVID-19 தொற்றுக்கும், சுமார் 82-130 நோய்த்தொற்றுகள் கண்டறியப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஐசிஎம்ஆர், மே 11 முதல் ஜூன் 4 வரை ஸீராலஜிகல் -சர்வே ஒன்றை நடத்தியது. கோவிட் கவாச் எலிசா கிட் எனப்படும் பரிசோதனை முறையைப் பயன்படுத்தி கொரோனாவிர்க்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் உருவாகியிருக்கும் “IgG”  ஆன்டிபாடிகளைக் கண்டறியும் இரத்த பரிசோதனைகள் சுமார் 28,000 நபர்களிடம் நடத்தப்பட்டது. மே மாதத்தில் தேசிய அளவில் ஸீரா பாதிப்பு இந்திய மக்கள் தொகையில் 0.73 சதவீதமாக இருந்தது. ஆனால், ஸீரோ கணக்கெடுப்பின்படி பாதிக்கப்பட்டவர்களில், 18-45 வயதுக்குட்பட்டவர்களில் 43.3 சதவீதமும், 46-60 வயதுக்குட்பட்டவர்கள் 39.5 சதவீதமும், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 17.2 சதவீதமும் இருந்தனர்.

“எங்கள் கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகள், இந்தியாவில் ஒட்டுமொத்த பாதிப்பு குறைவாக காட்டுவதாக குறிக்கிறது, வயது வந்தோரில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் 2020 மே மாத மத்தியில் SARS-CoV-2 க்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில், பெரும்பாலான மாவட்டங்களில் குறைவான பாதிப்பே காணப்படுகிறது. மக்கள் இன்னுமும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் 95,735 பேருடன், ஒரே நாளில் அதிக பட்ச தினசரி எண்ணிகையை பதவு செய்த அடுத்த நாள் இந்த அறிவிப்பு வெளிவந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் மொத்த எண்ணிக்கையை 44.6 லட்சம் எனவும், இறப்புகள் எண்ணிக்கை சுமார், 75,000 க்கும் மேற்பட்டிருந்தது. ஐ.சி.எம்.ஆர் அறிக்கையின்படி, செப்டம்பர் 9 அன்று கோவிட் -19 க்கு 11.2 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை 5.2 கோடி மாதிரிகள் நாட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளன.