‘பிர்சா முண்டா’ படம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் பா.இரஞ்சித். இப்படத்துக்கு ‘சல்பேட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் கலையரசன், தினேஷ் உள்ளிட்டோர் ஆர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

பாக்ஸிங் வீரராக நடிப்பதற்கு ஆர்யா முழுமையாக தன் உடலமைப்பை மாற்றியமைத்தார். இதற்காக மிகவும் மெனக்கிடலில் ஈடுபட்டு தனது உடலமைப்பை மாற்றியுள்ளார்.

இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு நாயகியாக நடிக்கவுள்ளதாகப் பலருடைய பெயர்கள் அடிபட்டன. இறுதியாக, ‘போதை ஏறி புத்தி மாதிரி’ படத்தின் மூலம் அறிமுகமான துஷாரா நாயகியாக நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

ஆர்யாவுடன் கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.