தடகள சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய வீராங்கனை புதிய சாதனை

கவுகாத்தி:

டகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை ஏற்கனவே தான் செய்த தேசிய சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் 58வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி சாம்பியன் ஷிப் போட்டி நடை பெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் 22வயதான ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு அவர் 11.30 வினாடிகளில் இலக்கை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. சொந்த சாதனையை இப்போது முறியடித்து இருக்கிறார்.

டுட்டி சந்தி ஏற்கனவே கடந்த 2010 மற்றும் 2014ம் ஆண்டு ஆசிய தடகள போட்டியில் பங்குபெற்று தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஆசிய அளவிலாள தடகள போட்டி வீரர்களில் 2வது இடத்தில் இருந்து வருகிறார்.