ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவுக்கும் கொரோனா தொற்று….!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .

நடிகை ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா அர்ஜூன் , அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் , விஷால் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.

சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியும் அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் தயாரிப்பாளர் டிவிவி தனய்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் தெலுங்கில் பல மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்தவர். கடந்த ஒரு வாரமாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். அப்போது கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.