மெல்போர்ன்

மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வெயின் பிராவோ டி-20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மேற்கு இந்திய தீவுகள் தேசிய அணியில் முக்கிய பங்கு வகிக்கும் பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ்அணிக்காகவும் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பிக் பாஷ் டி-20 லீக் தொடர் போட்டியில் சமீபத்தில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ 4 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

ஐந்தாவது விக்கெட்டை வீழ்த்தியபோது ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்டை வீழ்த்திய முதல் வீரர் என்ற அபூர்வ சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 331 விக்கெட்டுகள் வீழ்த்தி 2-வது இடத்திலும்,மேற்கு இந்திய தீவுகள் வீரர் சுனில் நரைன் 307 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.