ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்ற இந்தியஜனநாய வாலிபர் சங்கத்தினர் கைது

தூத்துக்குடி:

யிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் ஸ்டெர்டிலட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் , இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி  எஃப்.சி.ஐ. குடோன் அருகில் ஒன்றுகூடி, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். பிறகு, அங்கிருந்து ஆலையை முற்றுகையிட பேரணியாகச் சென்றனர்.

அவர்களை, மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக போராட்டக்காரர் களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  தொடர்ந்து, அவர்கள் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை  போலீஸார் கைதுசெய்தனர்.