டில்லி:
எச்பி எனப்படும் இந்துஸ்தான் பெட்ரோலியம் இனி டைனமிக் (மாறும்) விலையில் பெட்ரோல் விற்பனையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
பெட்ரோலிய விற்பனையில் தனியார் போட்டியை சமாளிக்க அரசு நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் டைனமிக் விலைமுறையை இந்தியாவில்  அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
1hp
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பப்ரேஷன் 13,208 சில்லறை விற்பனை நிலையங்களுடன் பெட்ரோலியப் பொருட்கள் விற்பனைத் துறையில் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக விளங்குகிறது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் தனியா நிறுவனங்களான ரிலையன்ஸ், ஷெல் போன்ற பெட்ரோலிய நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை மாற்றி வருவதுகுறிப்பிடத்தக்கது.
டைனமிக் விற்பனைமுறை இப்போது உலகமெங்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில் பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றதாழ்வுடன் காணப்படும். டைனமிக் விலை குறையும்போது மற்ற நிறுவனங்களும் பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்படுவார்கள்.
இந்தமுறை பரீட்சாத்த ரீதியாக சில சில்லறை விற்பனை நிலையங்களில் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவில் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது..