முடிவுக்கு வந்த டைனோசர் முட்டை விவகாரம் : தப்பித்த டைனோசர்கள்

திருச்சி

பெரம்பலூர் ஏரியில் கிடைத்தவை டைனோசர் முட்டைகள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது

டைனோசர் என்னும் ஒரு ராட்சச விலங்கு உலகில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது.  இந்த விலங்குகள் குறித்து வெளிவந்த ஜுராசிக் பார்க் என்னும் திரைப்படம் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.   சமீபத்தில் பெரம்பலூர் குன்னம் ஏரியைத் தோண்டும் போது முட்டை உருவில் பல ராட்சச உருண்டைகள் கிடைத்தன.

 இந்த உருண்டைகள் டைனோசர் முட்டைகள் என ஒரு வதந்தி பரவத் தொடங்கியது.  அதையொட்டி பலரும் டைனோசர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வந்ததாக பல சொந்தக் கதைகளை இணையத்தில் பரப்பினர்.   திருச்சி அருங்காட்சியக காப்பாளர் சிவகுமார், இவை டைனோசர் முட்டைகள் இல்லை என விளக்கி உள்ளார்

சிவகுமார்,”இந்த பாறைகள் டைனோசர் முட்டைகள் அல்ல.  இவை நத்தை போன்ற கடல் உயிரினங்களின் படிமங்கள் ம்,ஈது அம்மோனைட் படிவதால் உண்டாவது” என விளக்கும் அளித்துள்ளார.  இதையொட்டி டைனோசர் முட்டை விவகாரம் முடிவடைந்துள்ளது.

இது குறித்து வாழப்பாடி ராம சுகந்தன் தனது டிவிட்டர் பக்கத்தில், “ 2 நாளாக வாயில்லா ஜீவன் டைனோசரை வெச்சு செஞ்ச பாவம் ஒன்னா ரெண்டா” எனப் பதிந்துள்ளார்.