பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள்: வெள்ளிக்கலசம், போட்டோ ஸ்டேன்டு தலா ரூ.1 கோடிக்கு ஏலம் போன அதிசயம்

டில்லி:

பிரதமர் மோடிக்‍கு கிடைத்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டு வருகின்றன. தற்போது, ஒரு புகைப்பட ஸ்டாண்டு மற்றும் வெள்ளிக் கலசம் தலா ஒருகோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அவருக்கு வழங்கப்படும் பரிசுப் பொருட்கள் அரசின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பொருட்களை ஏலம் விட முடிவு செய்து, கடந்த 14ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டு வருகிறது.

இதற்கான இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஏலம் எடுக்க விரும்புபவர்கள் பொருட்களை வாங்கலாம் என்றும், இந்த ஏலம் அக்டோபர் 3ந்தேதியுடன் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பரிசுப்பொருட்கள் ஏலம் மூலம் கிடைக்கும் தொகை,  கங்கை நதி துாய்மை திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஏலத்தில் சால்வை, சட்டை மற்றும் மாடர்ன் ஆர்ட் உள்பட சுமார் 2700க்கும் மேற்பட்ட பரிசுப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன. குறைந்த பட்ச விலை ரூ.200 முதல் ரூ.2.5 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பிரதமரின் பரிசுப் பொருட்களை ஏலம் எடுக்க பலரும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடியின் புகைப்பட ‘ஸ்டான்டி’ன் அடிப்படை விலை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது ,  இதை ஒரு கோடி ரூபாய்க்கு ஓருவர் ஏலம் கேட்டுள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடிக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பரிசாக வழஞ்கிய வெள்ளிகுடத்தின் அடிப்படை விலை 18 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.

கன்று – பசு உலோக சிலையின் அடிப்படை விலை 1500 ரூபாயாக நிர்ணியக்கப்பட்டுள்ளது. இதை 51 லட்ச ரூபாய்க்கு ஒருவர் ஏலம் கேட்டுள்ளார்.

நீங்களும் ஏலம் எடுக்க விருப்பமா? கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…

https://pmmementos.gov.in/pmmementos/#/