Random image

‘ஈ சிகரெட்’ விற்பனைக்குத் தடை: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை:

மிழகத்தில் ஈ சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் ‘ஈ சிகரெட்’ விற்பனை மற்றும் இறக்குமதி செய்யவும் தடை விதிப்பதாக  ஆகஸ்டு 30ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

‘புகைப்பழகத்திற்கு அடிமையான  பலர், உடல் நலத்தை கருத்தில்கொண்டு,  நிகோடின் கலந்த சாதரண சிகரெட்டுக்கு பதில்,  ஈசிகரெட் எனப்படும் மின்னனு கருவி மூலம் புகைத்து வருகின்றனர். இதன் காரணமாகவும் உடல் பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு முடிகள் தெரிவித்துள்ளன. ஈ சிகரெட் புகைப்பதால், புற்று நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி மத்திய அரசு ஈ சிகரெட்டுக்கு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே ஈ-சிகரெட் எனும் எலக்ட்ரானிக் சிகரெட் தமிழகத்தில் தடை செய்வதாக கடந்த ஜூன் 14-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் கருத்துரு தாக்கல் செய்யப்பட்டு  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 3ந்தேதியிட்டு வெளியிடப்பட்ட அரசாணையில், ஈ-சிகரெட்டில் உள்ள மூலக்கூறுகள் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கொண்டிருப்பதாகவும், தீவிரமான நுரையீரல் பிரச்சனை, கர்ப்பிணிக்கும், சிசுவுக்கும் கேடு விளைவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து  பள்ளி,கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும்,  பீடி, சிகரெட்டுக்கு இணையாகவோ, அதைவிட அதிகமாகவோ அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஈ சிகரெட்கள் மற்றும் அதனைப் போன்ற சிகரெட்களின் உற்பத்தி, விற்பனை, விநியோகம், இறக்குமதி, பயன்பாடு, காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்குத் தமிழகத்தில் தடை விதிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.