சென்னை: கொரோனா முடக்கம் தளர்வுகளின் இயக்கப்பட்டு வரும் உள்நாட்டு சிறப்பு விமானங் களில், சென்னை வரும் பயணிகளுக்கு  சென்னை விமான நிலையத்தில்  இ பாஸ் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த  நடைமுறை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தில் இதுவரை 4முறை தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால்,   மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனுமதியின் பேரில்,   கடந்த மே மாதம் 25 ஆம் தேதி முதல் நாட்டில் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் விமானப் பயணிகள் கண்டிப்பாக இ-பாஸ் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான சேவைப்பகுதியில் உள்ள ஓய்விடத்தில், பயணிகள் இ-பாஸ் பெறும் வசதிக்காக இணையவசதியுடன் கனிணி சேவை ஏற்படுத்தப்பட்டது.

தற்போது,  சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இ-பாஸ் நடைமுறை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இனிமேல் தமிழகஅரசின் இணையதளத்தில் சென்று இ-பாஸ் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.