இ-பாஸ் நடைமுறை ரத்தா? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று மாலை ஆலோசனை…

சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வராமல் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில்,  மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் சண்முகம் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை (23ந்தேதி மாலை நிலவரம்) 1,92,964ஆக அதிகரித்துள்ளது.  அதுபோல உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,232ஆக அதிகரித்துள்ளது. இன்று 5,210 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,793ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகதலைமைச் செயலாளர் சண்முகம், சென்னையை தவிர்த்து பிற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் இன்று மாலை 3 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

மாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், பொதுமுடக்கம், இ-பாஸ் தளர்வு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்துஅப்போது ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.