தந்தை பெரியாரின் 140வது பிறந்த நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
சென்னை:
பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும், தந்தை பெரியாரின் 140வது பிறந்தநாள். இன்று அதையொட்டி அவரது சிலை மற்றும் படங்களுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பெரியாரின் உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை அண்ணசாலையிய்ல உள்ள சிம்சன் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள், திமுக தொண்டர்கள் என ஏராளமானோர் வந்திருந்தனர்.