உலகமே சந்திக்கப் போகும் எதிர்காலப் பிரச்னை : மின்னணு குப்பைகள்

ந்தியாவின் கனிமவளத்திற்காக பல்வேறு பதிய ஆய்வுகள் நடைபெறும் அதே சமயம் கனிமங்கள் இருக்குமிடத்தில் உள்ள மக்கள் விரட்டப்படுவதாகவும் நாம் செய்திகளைக் காண்கின்றோம். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இந்தப் பிரச்னைக்கு நாமும் ஒரு காரணமாக உள்ளோம் என்பதை யாரும் தவிர்த்திடமுடியாது.

ஏன் தெரியுமா? நமக்கான புதிய தொழில்நுட்பம் கிடைக்க நாம் கனிமவளங்கள்தான் பெரும் பங்காற்றுகின்றன. உதாரணம் ஐபோனில் உள்ள கனிமங்கள் என்னவென்று தெரியுமா?

செப்பு, கோபால்ட், குரோமியம், நிக்கல் , கார்பன், சிலிகான் , அலுமினியம், இரும்பு என பல தனிமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. படத்தில் முழு விபரமும் காணலாம்

சிறிய உதாரணம் கொடுக்கப்பட்டுள்ள கணக்குப்படி ஆப்பிள் 217 மில்லியன்  (21.7 கோடி) ஐபோன் விற்கப்பட்டுள்ளது. அப்படியெனில் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள செப்பு தோராயமாக 1,900 டன் இருக்கலாம், ஒரு ஐபோனுக்கே இவ்வளவு என்றால் இன்று சந்தையில் கிடைக்கின்றன நூற்றுக்கணக்கான செல்பேசி நிறுவனங்கள் எவ்வளவு தனிமங்களை பயன்படுத்தி இருக்கும். இன்னமும் எவ்வளவு தேவை இருக்கும்.

அப்படியே தனிமங்கள் கிடைத்தாலும் அதிலிருந்து கிடைக்கும் கழிவுகள் எவ்வளவு?

இப்போது நம்மிடையே உள்ள மின்னணுக்குப்பைகளை கணக்கிட்டால்  5 மில்லியன் (50 லட்சம்) யானைகள் ஒன்றன் மேல்ஒன்றாக நிறுத்திவைக்கலாம் என்றால் நீங்களே கற்பனை செய்து கணக்கிட்டுக்கொள்ளுங்கள்

செல்போனுக்கு இப்படியென்றால் விமானம், வாகனங்கள் என்று எல்லாமே தனிமங்களைக் கொண்டுதான் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கி ன்றன. எனவே அளவோடு மின்னணுக்கருவி களை பயன்படுத்துவோம், அவற்றை முறையாக மறுசுழற்சி செய்வோம். இல்லையேல் இவைகள் மண்ணுடன்  கலந்து சிலபல வருடங்களின்  மண்ணை மலடாக்கிவிடும் அல்லது அதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எந்த ஒரு பொருளும் நச்சுத்தன்மையுடன்தான் இருக்கும்

-செல்வமுரளி