ஆசிய விளையாட்டுப் போட்டி: பதக்கம் வென்ற தமிழகவீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் தமிழகஅரசு பரிசு

சென்னை:

ந்தோனேசியாவில் நடைபெற்று வரும் 18வது ஆசிய உலகப்போட்டிகளில் இந்திய அரசு சார்பில் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற 3 வீரர்களுக்கு தலா ரூ.20லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில்,  குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிக்கா கார்த்திக் மற்றும் குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரர் சவுரவ் கோஷல் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக  முதலமைச்சர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,

ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஜோஷ்னா சின்னப்பா, தீபிக்கா கார்த்திக் மற்றும் சவுரவ் கோஷல் ஆகிய  மூவரும் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பதை அறிந்து தாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் அவர்கள் மூவரும் பதக்கம் வென்றுள்ளதை குறிப்பிட்டுள்ள முதல்வர், இதே போன்று மேலும் பல சாதனை புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.