மின்சார ரெயில் விபத்தில் பலியான 4 பேருக்கு தலா ரூ.8 லட்சம்

--

சென்னை:

சென்னை பரங்கிமலை ரெயில் நிலைய தடுப்புச்சுவர் மோதி மின்சார ரெயிலில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர்.

விரைவு ரெயில்கள் செல்லும் வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்கப்பட்டதாலும், கூட்ட நெரிசலால் படியில் தொங்கி பயணம் செய்ததாலும் இந்த துயர சம்பவம் நடந்தது.

இந்த விபத்து வழக்கை சென்னை ரெயில்வே தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்தது. பலியான 4 பேரது குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சமும், காயமடைந்த 5 பேருக்கு ரூ. 2 லட்சமும் வழங்க உத்தரவிட்டது.

You may have missed